தேசிய செய்திகள்

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல் + "||" + Rahul Gandhi I’m sorry to hear about the demise of His Majesty Sultan Qaboos of Oman

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல்

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல்
ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79.  1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.  இந்நிலையில், நேற்று காபூஸ்  மரணமடைந்ததாக  ஓமன் அரசு தெரிவித்தது.

பிரதமர் மோடி, ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத்க்கு இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில்,

 “ஓமன் மன்னர் காபூஸ் மறைவைக் கேட்டு நான் வருந்துகிறேன். அன்பான தலைவரை இழந்திருக்கும் ஓமன் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.