105 வயதுடைய மூதாட்டியின் பாதங்களை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி!


105 வயதுடைய மூதாட்டியின் பாதங்களை  தொட்டு வணங்கிய பிரதமர் மோடி!
x
தினத்தந்தி 12 Jan 2020 8:45 PM IST (Updated: 12 Jan 2020 8:45 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் 105 வயது ஓய்வூதியதாரரின் பாதங்களை பிரதமர் மோடி தொட்டு வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

துறைமுக விழாவில் நேற்று பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளை மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய கொல்கத்தா துறைமுக விழாவில் 105 வயது ஓய்வூதியதாரரான நகினா பகத், 100 வயதான நரேஷ் சந்திரா சக்கரவர்த்தி ஆகியோரை பிரதமர் மோடி சிறப்பித்தார். அப்போது 105 வயது நகினா பகத், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்க முயன்றார்.

ஆனால் அவரை தடுத்த பிரதமர் மோடி, நகினா பகத்தின் பாதங்களை  தொட்டு வணங்கினார். பிரதமர் மோடியின்  இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

Next Story