நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் - பிரதமர் மோடி


நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Jan 2020 3:50 PM GMT (Updated: 12 Jan 2020 3:50 PM GMT)

நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்  மோடி,  கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.  சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அதனை தொடர்ந்து கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,

கொல்கத்தா துறைமுகம் இந்திய நாட்டின் தொழில், ஆன்மிகம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். இந்த துறைமுகத்தை நவீன இந்தியாவின் அடையாளமாக மாற்றுவது நமது கடமை என்று அவர் கூறினார்.

கொல்கத்தா துறைமுகத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளரும், பாரதீய ஜனசங்கத்தை தோற்றுவித்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசிய பிரதமர் மோடி,

நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும், கொல்கத்தாவில் உள்ள பெல்டவர் ஹவுஸ், பழைய நாணய கட்டிடம், விக்டோரியா நினைவகம் உள்ளிட்ட காட்சியகங்கள் நவீனமாக்கப்படும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

பெல்டவர் ஹவுசினை உலகின் அருங்காட்சியமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும். பிப்லோபி பாரத் என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். அதில் நேதாஜி, சுபாஷ்சந்திரபோஸ் அரவிந்தோ கோஷ் ராஷ் பிஹாரி போஸ் தேஷ்பந்து, பாகா ஜடின், பினாய், பாடல், தினேஷ் போன்ற ஒவ்வொரு  சுதந்திர போராளிகளுக்கும் அதில் முக்கியத்துவம் வழங்கப்படும்

இவ்வாறு மோடி கூறினார்.

Next Story