அலகாபாத் மகா மேளாவுக்காக ‘ராம நாம’ வங்கிக்கிளை திறப்பு


அலகாபாத் மகா மேளாவுக்காக ‘ராம நாம’ வங்கிக்கிளை திறப்பு
x
தினத்தந்தி 12 Jan 2020 8:58 PM GMT (Updated: 12 Jan 2020 8:58 PM GMT)

அலகாபாத் மகா மேளாவுக்காக ‘ராம நாம’ வங்கிக்கிளை திறக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

ராம நாம சேவா சன்ஸ்தன் என்ற அமைப்பு, ராம பக்தர்களுக்காக ‘ராம நாம’ வங்கியை நடத்தி வருகிறது. இது, மற்ற வங்கிகளைப் போல், ஏ.டி.எம்.கள், காசோலைகள் கொண்டது அல்ல. ராமர் பெயர்தான், அதன் ஒரே பணம். ஒரு நோட்டில் ராமர் பெயரை எத்தனை தடவை எழுதிக் கொடுக்கிறார்களோ, அத்தனை ராமர் பெயர்கள், அவர்களது வங்கிக்கணக்கில் சேரும்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சங்கம் பகுதியில் புகழ்பெற்ற ‘மகா மேளா’ தொடங்கி உள்ளது. அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ‘ராம நாம’ வங்கியின் தற்காலிக கிளை தொடங்கப்பட்டுள்ளது. சிவராத்திரியுடன் மகா மேளா முடிவடையும்போது, தற்காலிக வங்கியும் மூடப்பட்டு விடும் என்று ராமநாம சேவா சன்ஸ்தன் தலைவர் அசுதோஷ் வர்ஷ்னே தெரிவித்தார்.

Next Story