பெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் ஆய்வில் தகவல்


பெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 15 Jan 2020 8:51 AM GMT (Updated: 2020-01-15T14:21:42+05:30)

அதிக பெற்றோர்கள 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று  கல்வி நிலை  -2019 அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 24 மாநிலங்களில் 26 கிராமப்புற மாவட்டங்களில் 4 முதல் 8 வயது வரையிலான கிட்டத்தட்ட 37,000 குழந்தைகளை இந்த தொண்டு நிறுவன சர்வேயர்கள் ஆய்வு செய்து உள்ளனர்.

அறிவாற்றல் திறன்களைச் சோதிக்கும் பல்வேறு  செயல்களைச் செய்யக்கூறி ஒவ்வொரு குழந்தையையும் ஆய்வில் ஈடுபடுத்தி உள்ளனர்..  வண்ணம் மற்றும் அளவு அடிப்படையில் படங்களை வரிசைப்படுத்துதல்,வடிவங்களை அடையாளம் காணுதல்,, நான்கு துண்டுகள் கொண்ட விலங்கு புதிரை ஒன்றாகப் பொருத்துல் போன்ற சோதனைகளை நடத்தினர். எளிய கல்வியறிவு மற்றும் எண் சோதனைகள். மகிழ்ச்சி, சோகம், கோபம் மற்றும் பயம் ஆகியவற்றைக் காட்டும் முகங்களைக் கொண்ட அட்டைகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மூலம் சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி கண்காணிக்கப்பட்டது.

கணக்கெடுக்கப்பட்ட 26 கிராமப்புற மாவட்டங்களில் 1 ஆம் வகுப்பில்  படிக்கும் 16 சதவீத  குழந்தைகள் மட்டுமே எழுத்தை வாசிக்க தெரிந்தவர்களாக உள்ளனர். 40 சதவீத குழந்தைகள் எழுத்தை அடையாளம் காண முடியவில்லை.இந்த குழந்தைகளில் 41 சதவீதம்  மட்டுமே இரண்டு இலக்க எண்களை அடையாளம் காண முடிந்து உள்ளது.

இருப்பினும், கற்பிப்பதற்கு அதிக நேரம் செலவழிக்கக்கூடாது என்பதே தீர்வு என்று அசெர் (ASER )கண்டறிந்து உள்ளது. ஆரம்ப ஆண்டுகளில் பாடக் கற்றலைக் காட்டிலும் அறிவாற்றல் திறன்களில் கவனம் செலுத்துவது அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன்களை அறிந்து கொள்வது  பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது.

அறிவாற்றல் திறன்கள் சோதனையில் ஒன்றை சரியாகச் செய்யமுடியாத 1-ம் வகுப்பு  குழந்தைகளில், சுமார் 14 சதவீதம்  பேர் சொற்களைப் படிக்க முடிகிறது. 19 சதவீதம்  பேர் ஒற்றை இலக்க எண்ணை கூற முடிகிறது.

மூன்று அறிவாற்றல் திறன் சோதனைகளை  சரியாகச் செய்யக்கூடிய குழந்தைகளில், 52 சதவீதம்  சொற்களைப் படிக்க முடிகிறது., மேலும் 63சதவீதம்  கூட்டல் கணக்குகளை  தீர்க்க முடிகிறது என்று ஆய்வு காட்டுகிறது.

 ஒரு ஒப்பீடலில் 1 ஆம் வகுப்பில் உள்ள  ஆறு வயது குழந்தைகளில், தனியார் பள்ளிகளில் 41.5 சதவீதம் பேர்  எழுத்துக்களை படிக்கிறார்கள் ஆனால் அரசுப் பள்ளிகளிலிருந்து 19 சதவீதம் பேர்  மட்டுமே எழுத்துக்களை படிக்கிறார்கள்.  பாலின வேறுபாட்டால் இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கிறது.

பெற்றோர் 4-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை  சேர்க்க தனியார் பள்ளிகளை அதிகம் விரும்புகிறார்கள். 

அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வயதை விட இளையவர்கள் 4 அல்லது 5 வயது என ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகளாவிய ஆராய்ச்சியில் 90 சதவீதம்  மூளை வளர்ச்சியானது 5 வயதிற்குள் நிகழ்கிறது, அதாவது குழந்தை பருவக் கல்வியின் தரம் ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் நீண்டகால பள்ளிப்படிப்பில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குழந்தையின் வீட்டுப் பின்னணி, குறிப்பாக தாயின் கல்வி நிலை உட்பட, இந்த கட்டத்தில் பெறப்பட்ட கல்வியின் தரத்தை ஏராளமான காரணிகள் தீர்மானிப்பதாக இந்த ஆய்வு அறிக்கை காட்டுகிறது

Next Story