இந்திய ராணுவ தினம்: தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது - பிரதமர் மோடி புகழாரம்


இந்திய ராணுவ தினம்: தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது - பிரதமர் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 15 Jan 2020 12:48 PM GMT (Updated: 15 Jan 2020 12:48 PM GMT)

இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.  இதை ஒட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று பாராட்டியுள்ளார்.  இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். 

சமீமா என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு உரிய சமயத்தில் ராணுவம் செய்த உதவியை குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் ராணுவ தின கொண்டாட்டங்கள் களை கட்டின.

ராணுவத்தினரின் வண்ணமிகு அணிவகுப்புகள் கண்ணைக் கவர்ந்தன. முழுதும் ஆண் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்புக்கு கேப்டன் தானியா ஷேர் கில் என்ற பெண் ராணுவ அதிகாரி தலைமயேற்று நடத்தியது அனைவரையும் கவர்ந்தது.

Next Story