இணையத்தில் வைரலாகும் நாய் பாடல் பாடும் காட்சி


இணையத்தில் வைரலாகும் நாய் பாடல் பாடும் காட்சி
x
தினத்தந்தி 16 Jan 2020 4:50 AM GMT (Updated: 2020-01-16T10:20:03+05:30)

ஆர்மோனியத்துடன் ஒருவர் பாடுவதை அவருடன் சேர்ந்து நாயும் பாடுவது போன்ற காட்சிப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை

பிரபல பாடகி ரானு மாண்டல் பாடிய தேரி மேரி கஹானி... பாடல் இந்தி பேசும் மாநிலங்களில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த நிலையில் அதே பாடலை ஆர்மோனியத்துடன் ஒருவர் பாட அவருடன் சேர்ந்து அவரது வளர்ப்பு நாய் ஒன்றும் இணைந்து பாடுகிறது.

தொடர்ந்து அவர் ராகத்தை இழுக்கும்போது, தானும் பாடவேண்டும் என்ற நோக்கில் நாய் ஊளையிட்டு தனது பாடல் பாடும் திறமையை வெளிக்காட்டியது. சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ எங்கே, எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் வெளியாகவில்லை.Next Story