தொடர்ச்சியாக 5-வது மாதமாக டிசம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி -இறக்குமதி குறைந்துள்ளது


தொடர்ச்சியாக 5-வது மாதமாக டிசம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி -இறக்குமதி குறைந்துள்ளது
x
தினத்தந்தி 16 Jan 2020 5:42 AM GMT (Updated: 16 Jan 2020 5:42 AM GMT)

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்ச்சியாக 5-வது மாதமாக டிசம்பரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்துள்ளது.

மும்பை,

இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி டிசம்பரில் 1.11 சதவீதம் குறைந்து உள்ளது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம் சார்பில்  வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 டிசம்பரில் ஏற்றுமதி 27.36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2018 டிசம்பரில் 27.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 2019 டிசம்பரில் ரூ.1,94,764.74 கோடியாக இருந்தது. இது 2018 டிசம்பரில் ரூ.1,97,044.76 கோடியுடன் ஒப்பிடும்போது 1.16 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.

இறக்குமதியும் 8.83 சதவீதம் குறைந்து 38.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக  இருந்தது. வர்த்தக பற்றாக்குறை இந்த மாதத்தில் 11.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. இது 2018 டிசம்பரில் 14.49 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பில் இந்தியா 2018 டிசம்பரில் ரூ.299,553.40 கோடி மதிப்புள்ள  பொருட்களை விட  8.24 சதவீதம் குறைவாக 2019-ல் ரூ.2,74,883.64  கோடியாக இறக்குமதி செய்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி பொருட்கள் மற்றும்  வரிகள் சேர்ந்து, ஏப்ரல்-டிசம்பர் 2019-20ல், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 0.93% நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியது. ஆறு மாத காலப்பகுதியில் இந்தியா 397.48 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து உள்ளது.

ஏப்ரல்-டிசம்பர் 2019-20ல் ஒட்டுமொத்த இறக்குமதி 455.14 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 5.82 சதவீதம் குறைந்துள்ளது.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்கள் படி  ஏப்ரல்-டிசம்பர் 2018-20 காலகட்டத்தில் ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 239.29 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.16,84,558.61 கோடி) ஏப்ரல்-டிசம்பர் 2018-19 காலகட்டத்தில் 244.08 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து (ரூ.17,02,261.31 கோடி) இருந்தது. டாலர் அடிப்படையில் 1.96 சதவீதம் குறைந்துள்ளது. ரூபாய் அடிப்படையில் 1.04 சதவீதம் குறைந்துள்ளது.

Next Story