வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்


வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2020 9:04 AM GMT (Updated: 16 Jan 2020 9:04 AM GMT)

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதுடெல்லி,

நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2017 நவம்பர் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி வரும்  வரும் 31-ம் தேதி பிப்ரவரி 1 மற்றும் மார்ச் 11, 12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

வங்கி ஊழியர்கள் மொத்தம் ஐந்து நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்  பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.

Next Story