இந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்தித்தார் -சஞ்சய் ராவத்


இந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்தித்தார் -சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 16 Jan 2020 9:32 AM GMT (Updated: 2020-01-16T15:02:05+05:30)

இந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்திப்பார் என சிவசேனா மூத்த தலைவரும், மேல் சபை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை

சிவசேனா மூத்த தலைவரும், மேல் சபை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மும்பை போலீஸ் கமிஷனர் யார், 'மந்திராலயத்தில்' யார் அமர்வது என்று தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், ஷரத் ஷெட்டி ஆகியோர் தீர்மானித்த  காலம் ஒன்று இருந்தது.

இந்திரா காந்தி கரீம் லாலாவைச் சென்று சந்திப்பார். அப்படிப்பட்ட  நிழல் உலகை நாங்கள் பார்த்துள்ளோம், இப்போது அது வெறும் பேச்சுத்தான்.  குண்டர்கள் பெருநகரங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். இப்போது அப்படி எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

நான் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிறரின் புகைப்பட நிகழ்ச்சியை  நடத்தியுள்ளேன். தாவூத் இப்ராஹிமைப் பார்த்த மற்றும் பேசிய ஒரு சிலர் நாட்டில் உள்ளனர். நான் அவரைப் பார்த்திருக்கிறேன், அவருடன் பலமுறை பேசினேன், மிரட்டினேன், ஆனால் அது வேறு நேரம் என கூறினார்.

Next Story