பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் -அமித்ஷா பேச்சு


பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் -அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 16 Jan 2020 10:37 AM GMT (Updated: 2020-01-16T16:07:25+05:30)

பீகார் மாநிலத்தில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

முஸ்லிம் சகோதரர்களிடம் குடிமக்கள் திருத்தச்சட்டத்தை படித்து பார்க்க வேண்டும் என்று சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன்.

மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று ராகுல்காந்தி, லல்லு பிரசாத் யாதவிடம் சொல்ல வந்து இருக்கிறேன். மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் நீங்களும் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

பீகார் மாநிலத்தில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி விவகாரத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நிதிஷ்குமார் தலைமையின் கீழ் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

Next Story