முன்னாள் மந்திரியின் ரூ.5 கோடி சொத்து முடக்கம்


முன்னாள் மந்திரியின் ரூ.5 கோடி சொத்து முடக்கம்
x
தினத்தந்தி 18 Jan 2020 9:52 PM GMT (Updated: 18 Jan 2020 9:52 PM GMT)

முன்னாள் மந்திரியின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநில முன்னாள் மந்திரி ரங்கநாத் மிஸ்ரா. கடந்த 2007-2011-ம் ஆண்டுகளில் மாயாவதி தலைமையிலான மந்திரி சபையில் உள்துறை மற்றும் கல்வி இலாகா பொறுப்புகளை கவனித்து வந்தார். அவர் மந்திரியாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் அலகாபாத்தில் தாகூர் நகரில் இருக்கும் அவருக்கு சொந்தமான வீடு ஒன்றை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். 2010-ம் ஆண்டு அவரது பெயரிலும், உறவினர் பெயரிலும் அந்த சொத்து பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதுதவிர அவரும் உறவினர்களும் சேர்ந்து ‘சமிதி’ என்ற அறக்கட்டளை பெயரில் வாங்கியதாக கூறப்படும் சொத்துகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story