பட்ஜெட்

பட்ஜெட் கூட்டத்தொடர் : நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் + "||" + Budget Session: Economic Survey to be tabled in Parliament today

பட்ஜெட் கூட்டத்தொடர் : நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

பட்ஜெட் கூட்டத்தொடர் : நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நாளை நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதன்பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 

இந்த அறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிமுன் அன்சாரி மனு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில் தமிமுன் அன்சாரி மனு அளித்தார்.
2. ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31–ந் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் 31–ந் தேதி தொடங்குகிறது.