பட்ஜெட் 2020- வருமான வரிச்சலுகை இருக்குமா?


பட்ஜெட் 2020- வருமான  வரிச்சலுகை இருக்குமா?
x
தினத்தந்தி 31 Jan 2020 3:52 PM GMT (Updated: 31 Jan 2020 3:55 PM GMT)

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

புதுடெல்லி, 

 2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.  இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை சூழல் நிலவுவதால், நாளை தாக்கல் செய்யப்பட  உள்ள பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  தற்போதைய கடினமான நிதி சூழலில், பொருளாதாரத்தை   ஊக்கப்படுத்துவது அரசின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 

வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்குமா?

2019-20ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், அப்போதைய இடைக்கால நிதி அமைச்சர் பியுஸ் கோயல், 5 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவித்தார். பொருளாதாரத்தை அதிகரிக்க, சாமானிய மக்களிடம் பணத்தை கொடுத்தாக வேண்டிய நிலை தற்போது இருப்பதால், இந்த ஆண்டு வருமான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முக்கிய தொழில் துறைகள் முடங்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டெடுக்க ஏற்ற வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். இப்போது ரெயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே ரெயில் கட்டண உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story