விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை ஆதார் எண் அடிப்படையில் பான் கார்டு- நிர்மலா சீதாராமன்


விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை ஆதார் எண் அடிப்படையில் பான் கார்டு- நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2020 2:25 PM IST (Updated: 1 Feb 2020 2:25 PM IST)
t-max-icont-min-icon

பான் கார்டு விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை, ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் விரைந்து பான் கார்டு வழங்கப்படும்.

புதுடெல்லி

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஊட்டச்சத்து நிலையை பதிவேற்ற 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி தொழிலாளர்கள் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.

* 2022ம் ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படும், மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* நாட்டின் கஜானாவுக்கு பங்களிப்பு தருவோர் மதிக்கப்பட வேண்டும், வரி செலுத்துவோர் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

* காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும். 2021 ஜனவரி 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும். அதிக காற்று மாசு ஏற்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும். அந்த நிலம் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை சீர்படுத்த ரூ .4,400 கோடி ஒதுக்கீடு.

* சமீபத்தில் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5058 கோடி ஒதுக்கீடு.

* ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ .30,757 கோடி ஒதுக்கீடு.

* வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது, தற்போது காப்பீடு தொகை ரூ.1 லட்சமாக உள்ளது.வங்கிகள் திவாலானால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும்

* பான் கார்டு விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை, ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் விரைந்து பான் கார்டு வழங்கப்படும்.

* 100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்வோருக்கு லாபத்தின் மீது 100 சதவீத  வரி விலக்கு.

* குறைந்த விலை வீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக, வரி விடுமுறையை இன்னும் ஒரு வருடம் நீட்டிக்கப்படும்.  
1 More update

Next Story