காஷ்மீர் கவிதையை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்


காஷ்மீர் கவிதையை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 Feb 2020 12:33 AM IST (Updated: 2 Feb 2020 12:27 PM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் உரையின்போது காஷ்மீர் கவிதையை நிர்மலா சீதாராமன் உதாரணம் காட்டினார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தனது பட்ஜெட் உரையின்போது ஒரு காஷ்மீர் மொழி கவிதையை உதாரணம் காட்டி பேசினார். அதன் இந்தி மொழிபெயர்ப்பையும் அவர் வாசித்தார்.

அந்த கவிதை காஷ்மீரில் உள்ள ஷாலிமார் பாக் மற்றும் தால் ஏரியையும் பற்றியது. அதில் நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்த பின்னர் தற்போது இயல்புநிலை திரும்பி வருவதை குறிப்பிடுவதாக இருந்தது.
1 More update

Next Story