இந்தியாவில் அதிகமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் காணாமல் போகும் மாநிலங்கள்?


இந்தியாவில் அதிகமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் காணாமல் போகும் மாநிலங்கள்?
x
தினத்தந்தி 4 Feb 2020 5:42 AM GMT (Updated: 4 Feb 2020 5:42 AM GMT)

காணாமல் போன குழந்தைகள் மற்றும் பெண்களின் அதிகபட்ச எண்ணிக்கையை இந்தியாவில் இரு மாநிலங்கள் பதிவு செய்துள்ளன.

புதுடெல்லி

இந்தியாவில் காணாமல் போகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய குற்றப் பதிவு அலுவலகம் என்.சி.ஆர்.பி) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மற்ற அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன குழந்தைகள் மற்றும் பெண்களின் அதிகபட்ச எண்ணிக்கையை இந்த இரு மாநிலங்களும் பதிவு செய்துள்ளன.

2019 ஆம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட் காணாமல் போனவர்கள் (குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய) புள்ளி விவரங்களைப் பகுப்பாய்வு செய்யுமாறு தேசிய குற்றப் பதிவு அலுவலகம் அறிவுறுத்தியது, இதனால் கடத்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

தேசிய குற்றப் பதிவு அலுவலகம் ஆய்வு 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான அந்த அமைப்பு தொகுத்த வருடாந்திர இந்தியாவின் குற்றங்கள் அறிக்கையின் அடிப்படையாகக் கொண்டது.

காணாமல்போனோர், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அதிகமாக உள்ள பகுதிகளை அடையாளம் காண்பதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.

நாட்டின் சில பகுதிகளில் அதிகமாக இந்தச் சம்பவங்கள் குறித்துப் புகார் பதிவாகி உள்ளன. , இதுபோன்ற பகுதிகள் குழந்தை / பெண்கள் கடத்தலுக்கான ஆதாரம், அல்லது இலக்குப் பகுதிகளில் ஒன்றாக இருக்கலாம்.

அந்த அறிக்கையின்படி, மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காணாமல் போன மூன்று மாநிலங்கள் மராட்டியம், மேற்கு வங்கம் மற்றும் மத்தியபிரதேசம்.

2016 ஆம் ஆண்டில், மராட்டியத்தில் 28,316 பெண்கள் காணாமல் போயுள்ளனர், 2017 ஆம் ஆண்டில் 29,279 பேரும், 2018 ஆம் ஆண்டில் 33,964 பேரும் காணாமல் போயுள்ளனர்.

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இது குறித்த வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன,

மும்பையில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 4,718 மற்றும் 5,201 பெண்கள் காணாமல் போயுள்ளனர், புனேவில் அதே ஆண்டுகளில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை முறையே 2,576 மற்றும் 2,504 ஆகும்.

மேற்கு வங்கத்தில், 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை முறையே 24,937, 28,133 மற்றும் 31,299 ஆகும்.

மூன்று ஆண்டுகளில் மத்தியபிரதேசத்தில் பெண்கள் காணாமல் போன 21,435, 26,587 மற்றும் 29,761 அறிக்கைகள் பதிவாகியுள்ளன.

2016, 17, 18 ஆண்டுகளில், நாடு முழுவதும் மொத்தம் 63,407, 63,349 மற்றும் 67,134 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகம் பதிவாகியுள்ளது.

மத்தியப்பிரதேசம், இந்தூரில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 2017 ல் 596 ஆகவும், 2018 ல் 823 ஆகவும் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்னா மாவட்டத்திற்கான எண்ணிக்கை 2017 இல் காணாமல் போன 360 குழந்தைகளிலிருந்து 2018 இல் 564 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் , கொல்கத்தா மாவட்டத்தில் 2018 ல் அதிகபட்சமாகக் காணாமல் போன குழந்தைகள் பதிவாகியுள்ளனர், அங்கு 989 வழக்குகள் பதிவாகி உள்ளன, வங்காள தேச எல்லையிலுள்ள நாடியா மாவட்டம், 2017 ஆம் ஆண்டில் காணாமல் போன 291 குழந்தைகள் அறிக்கையிலிருந்து 2018 ல் 474 ஆக அதிகரித்துள்ளது.

Next Story