கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ஓட்டம்


கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ஓட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2020 12:58 PM GMT (Updated: 4 Feb 2020 12:58 PM GMT)

பஞ்சாப்பில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற நபர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் ஃபரித்காட் நகரில் கனடாவில் இருந்து சீனா வழியாக பஞ்சாப் வந்த 38 வயது நபர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தன்னை பரிசோதித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து  அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி குரு கோபிந்த் சிங் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்றவர் ஓடியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஓட்டம் பிடித்த நோயாளியை பிடித்து தருமாறு போலீசாருக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம்  உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. நோயாளியை தனிமைப்படுத்த சுகாதாரத் துறையின் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவுவதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீசாருக்கு மூத்த காவல்துறை அதிகாரி கேட்டுக்கொண்டார். 

நோயாளியின் ரத்த மாதிரி  புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story