கேரளாவில் சுகாதாரத்துறை கண்காணிப்பை ஏமாற்றும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள்


கேரளாவில் சுகாதாரத்துறை கண்காணிப்பை ஏமாற்றும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள்
x
தினத்தந்தி 5 Feb 2020 5:03 AM GMT (Updated: 5 Feb 2020 5:03 AM GMT)

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் கேரளாவில் சுகாதாரத்துறை கண்காணிப்பை ஏமாற்றுகிறார்கல். இதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

திருவனந்தபுரம்

சீனாவின் யுகான் நகரில் இருந்து கேரளா திரும்பிய 140 பேரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 46 பேருக்கு பாதிப்பு இல்லாத நிலையில், மற்ற 91 பேரின் முடிவுகளுக்காக கேரள அரசு காத்திருக்கிறது. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா அச்சம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியதாவது:-

சீனாவில் இருந்து திரும்பிய 2,239 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.  84 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தபோதிலும், சீனாவில் இருந்து திரும்பிய சிலர் சுகாதாரத்துறை கண்காணிப்பை ஏமாற்றுவதாகவும், இது மிகவும் ஆபத்தானது மட்டுமின்றி, குற்றமாகவும் கருதப்படும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டிருப்பது, உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே என்றும், மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, விரைவுக் குழுக்களும் பணியில் இருக்கின்றன.தேவையான உதவிகளை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி அளித்து உள்ளதாக கூறினார்.

Next Story