ஜார்கண்டில் காந்தி சிலை உடைப்பு


ஜார்கண்டில் காந்தி சிலை உடைப்பு
x
தினத்தந்தி 9 Feb 2020 4:24 PM GMT (Updated: 9 Feb 2020 4:24 PM GMT)

ஜார்கண்டில் காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.

ராஞ்சி, 

ஜார்கண்ட் மாநிலத்தில் கும்கர் டோலி என்ற இடத்தில் காந்தி சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை நேற்று நள்ளிரவில் சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இன்று காலை இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் சமூக விரோதிகள் சிலர் சுத்தியலால் காந்தி சிலையை உடைத்தது தெரியவந்தது. 

இதையடுத்து உடனடியாக அந்த சிலை சீரமைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

Next Story