லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பல வக்கீல்கள் காயம்


லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பல வக்கீல்கள் காயம்
x
தினத்தந்தி 13 Feb 2020 8:04 AM GMT (Updated: 13 Feb 2020 8:04 AM GMT)

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பல வக்கீல்கள் காயம் அடைந்தனர்.

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் பயங்கர சத்தத்துடன்  குண்டு வெடித்தது.  இதனால் பலர் அலறல் சத்ததுடன் அங்கும் இங்கும் ஓடினர். குண்டு வெடிப்பில் பல  வக்கீல்கள் காயம் அடைந்து உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த குண்டு வீச்சு சம்பவம்  வக்கீல்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

போலீசார் 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

Next Story