அமர்நாத் யாத்திரை ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது

அமர்நாத் யாத்திரை ஜூன் -23-ம் தேதி தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு,
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது என ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் கவர்னர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் 37-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று நடந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. 42 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story