இந்தியாவில் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது - ஆய்வில் தகவல்
இந்தியாவில் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.
புதுடெல்லி
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பறவை எண்ணிக்கை பெரும்பகுதி வெகுவாக குறைந்துவிட்டது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது என ஆய்வு கூறுகிறது.
15,000 க்கும் மேற்பட்ட பறவைக் கண்காணிப்பாளர்கள் இந்தியாவின் 867 பறவைகளை கண்காணித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. கழுகுகள், வல்லூருகள் , பாடும்பறவை போன்ற கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்து உள்ளது.ஆனால் தேசிய பறவையான மயிலின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆய்வின்படி வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவைகளால் இதுபோன்ற சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. மின் இணைப்புகளில மோதுதல் என்பதுபறவைகளுக்கு ஒரு பிரதான தற்போதைய அச்சுறுத்தலாக உள்ளன.
அதிக சரிவை சந்தித்த இனங்கள்: வெள்ளை கழுகு,ரிச்சர்டின் பிபிட்,இந்திய கழுகு, பிக் பில் லீப் வார்ப்ளர், பசிபிக் கோல்டன் ப்ளோவர், கர்லூ சாண்ட்பைப்பர்
எண்ணிக்கை அதிகரித்துள்ள இனங்கள்: ரோஸி ஸ்டார்லிங், ஃபெரல் புறா,குளோசி ஐபிஸ்,பிளைன்பிரினியா,ஆஷி பிரினியா
இந்தியன் மயில்
உள்ளூர் குருவி முழுவதும் தோராயமாக நிலையானதாகக் காணப்பட்டது. இது முக்கிய நகரங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது. துணைக் கண்டத்திற்குள் நீண்ட தூரம் புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கை ஒரு செங்குத்தான சரிவை சந்தித்து உள்ளது.
கிரீன் முனியா போன்ற பறவை வர்த்தகத்தில் பிரபலமான சில இனங்கள் ஆபத்தான குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. 1990 களில் இருந்து, பல வகையான கழுகுகள், புஸ்டர்டுகள் மற்றும் பிற சிறப்பு புல்வெளி பறவைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டதாக அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், 138 வருட இடைவெளிக்குப் பிறகு 1986 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான இனப்பெருக்க பழக்கங்களைக் கொண்ட ஆபத்தான பறவை ஜெர்டனின் கோர்சர் 2008 முதல் காணப்படவில்லை.
1997 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான மற்றொரு பறவையான ஃபாரஸ்ட் ஆவ்லெட் பல இடங்களில் காணப்படுகிறது.
நீண்டகால மதிப்பீட்டில், 261 இனங்களுக்கு மட்டுமே பொருத்தமான தரவு கிடைத்தது, அவற்றில் எண்ணிக்கையில் 52 சதவிகிதம் குறைந்துவிட்டன தற்போது 146 இனங்களுக்கு மட்டுமே தரவு உள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் குறைந்து வருகின்றன என இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் இணை நிறுவனர் எம்.டி.மதுசூதன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story