சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்: 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு விடுவிப்பு


சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்: 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு விடுவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 3:22 PM GMT (Updated: 18 Feb 2020 3:22 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 302 பேர் 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

புதுடெல்லி,

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1870க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஹூபே மாகாணம்,  நகரைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது. இந்த கோவிட்-19 வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவி, அங்கு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில்,  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 302 பேர் டெல்லி அருகே மனேசரில் ராணுவத்துக்குச் சொந்தமான முகாமில் தங்க வைப்பட்டு 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு இன்று விடுவிக்கப்பட்டனர். 

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 406 பேர் தனி முகாமில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் நடைபெற்றன. அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில்,  302 பேர் சில மருத்துவ அறிவுரைகளுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story