ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்  ப.சிதம்பரத்துக்கு ஆவணங்களை வழங்க வேண்டும்   சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Feb 2020 10:30 PM GMT (Updated: 18 Feb 2020 10:00 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழங்குமாறு சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான விவகாரத்தில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் இருவரும் ஜாமீன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று சி.பி.ஐ. தொடர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு, டெல்லி தனி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

ஆவணங்கள்

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்யப்பட்ட சில குறிப்பிட்ட ஆவணங்களை தங்களுக்கு வழங்க உத்தரவிடக்கோரி இருவரும் ஏற்கனவே முறையிட்டு இருந்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹர், அந்த குறிப்பிட்ட ஆவணங்களை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழங்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

Next Story