ஏப்ரல் 1 முதல் தூய்மையான பெட்ரோல்- டீசலுக்கு மாறும் இந்தியா


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 Feb 2020 10:26 AM GMT (Updated: 19 Feb 2020 10:26 AM GMT)

ஏப்ரல் 1 முதல் இந்தியா தூய்மையான பெட்ரோல் டீசலுக்கு மாற உள்ளது.

புதுடெல்லி

முக்கிய நகரங்களில் மூச்சுத் திணறலுக்கு காரணம் என்று கூறப்படும்  வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசின் அளவை குறைக்க ஏப்ரல் 1 முதல் இந்தியா உலகின் தூய்மையான பெட்ரோல் டீசலுக்கு மாற உள்ளது.

இந்தியா 2010 இல் 350 பிபிஎம் சல்பர் உள்ளடக்கத்துடன் பாரத் ஸ்டேஜ்-  3 தர எரிபொருளை ஏற்றுக்கொண்டது, பின்னர் 50 பிபிஎம் சல்பர் உள்ளடக்கத்தைக் கொண்ட பாரத் ஸ்டேஜ்- 4  தரத்துக்கு மாற ஏழு ஆண்டுகள் ஆனது. பாரத் ஸ்டேஜ்- 4    முதல் பாரத் ஸ்டேஜ்- 6  தரத்துக்கு மாற  மூன்று வருடங்கள் மட்டுமே ஆகி உள்ளது. இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள எந்த பெரிய பொருளாதார  நாட்டிலும் காணப்படவில்லை . 

நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏறக்குறைய பாதியைக் கட்டுப்படுத்தும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  (ஐ.ஓ.சி) தலைவர் சஞ்சீவ் சிங் கூறியதாவது:-

கிட்டத்தட்ட அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும்  பாரத் ஸ்டேஜ் -6 தர  பெட்ரோல் மற்றும் டீசலை உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளன. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது நாட்டின் ஒவ்வொரு துளி எரிபொருளையும் புதியதாக மாற்றுவதற்கான கடினமான பணியை மேற்கொண்டுள்ளன.

ஏப்ரல் 1 முதல் கந்தகம் குறைந்த  பாரத் ஸ்டேஜ் -6   தர எரிபொருளை வழங்குவதற்கான  முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் பாரத் ஸ்டேஜ் -6    தர  எரிபொருளை வழங்கத் தொடங்கியுள்ளன, அதே போல் எரிபொருள் நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகளை அடைந்துள்ளது.

ஸ்டோரேஜ் டெப்போக்களில் இருந்து, எரிபொருள் பெட்ரோல் நிலையங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளது, அடுத்த சில வாரங்களில் அவை அனைத்திலும்  பாரத் ஸ்டேஜ் -6   தர பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே இருக்கும்.

ஏப்ரல் 1 ஆம் தேதி நாட்டின் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும்  எரிபொருள் பாரத் ஸ்டேஜ் -6   தர  எரிபொருளாக இருக்கும் என்று நாங்கள் 100 சதவீதம் நம்புகிறோம் என கூறினார்.

Next Story