தேசிய செய்திகள்

சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் மாயம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி + "||" + Kerala HC has rejected a plea seeking CBI probe into the CAG report against the Kerala Home Dept

சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் மாயம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் மாயம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் காணாமல் போன விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
திரிசூர்,

கேரளாவில் சிறப்பு ஆயுதப்படை பட்டாலியனில் இருந்து 25 துப்பாக்கிகள் மற்றும் 12,601 துப்பாக்கி ரவைகள் போன்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன என மத்திய தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கேரள உள்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு திரிசூரை சேர்ந்த ஜார்ஜ் வட்டுகுளம் என்பவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சிறப்பு ஆயுத படை பட்டாலியனில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன என்று வெளிவந்துள்ள தணிக்கை அறிக்கை தீவிர விவகாரம் ஆகும்.  இது தேசிய பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்த கூடும்.

சம்பவம் நடந்து பல நாட்களாகியும் விசாரணையில் முன்னேற்றமில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் போலீசாரால் மூடி மறைப்பதற்கான முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

அதனால், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  இந்த மனு இன்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  ஊடக தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை பரிசீலிக்க முடியாது என கூறி அந்த மனுவை 2 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்: இலவச இணையதள வசதி கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில், இலவச இணையதள வசதி கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. நிர்பயா வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கில் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
3. பெரியார் பற்றி பேச்சு: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
பெரியார் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
4. பெரியார் பற்றி சர்ச்சை பேச்சு; நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட பெரியார் பற்றிய சர்ச்சை பேச்சு தொடர்புடைய வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
5. அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஜாமீன் மனு தள்ளுபடி
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.