2023-ம் ஆண்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி நிறுத்தம் மத்திய மந்திரி தகவல்


2023-ம் ஆண்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்   மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:20 PM GMT (Updated: 19 Feb 2020 11:20 PM GMT)

அனல் மின் நிலையங்களுக்காக நிலக்கரி இறக்குமதி செய்வதும் நிறுத்தப்படும் என்று மத்திய மந்திரி கூறினார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் கெவாடியாவில் நிலக்கரி துறையை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட நிலக்கரி மற்றும் சுங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

2023-24-ம் நிதி ஆண்டில் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. அதே நிதி ஆண்டில் இருந்து அனல் மின் நிலையங்களுக்காக நிலக்கரி இறக்குமதி செய்வதும் நிறுத்தப்படும். ரெயில்வே மற்றும் கப்பல் துறைகளின் உதவியுடன் 2030-ம் ஆண்டில் இருந்து அதிக நிலக்கரி வெட்டி எடுக்கப்படும். பன்முகத்தன்மை பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்களை ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2023-24-ம் ஆண்டில் இந்திய நிலக்கரி நிறுவனம் 5 ஜிகாவாட் மின்சாரத்தை சூரியசக்தி மூலம் தயாரிக்கும். நிலக்கரி சுரங்கத்தில் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று நிலக்கரி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story