சட்டவிரோத மென்பொருள் முடக்கம் தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும் 60 ஏஜெண்டுகள் கைது


சட்டவிரோத மென்பொருள் முடக்கம்   தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்   60 ஏஜெண்டுகள் கைது
x
தினத்தந்தி 19 Feb 2020 11:25 PM GMT (Updated: 19 Feb 2020 11:25 PM GMT)

ரெயில் பயணிகளுக்கு இனி எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறினார்.

புதுடெல்லி, 

சட்டவிரோத மென்பொருளை (சாப்ட்வேர்) பயன்படுத்தி ஏஜெண்டுகள் பலர் தட்கல் டிக்கெட் எடுப்பதால், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போய் விடுகிறது. இதனால் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் காத்திருக்கும் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது. இந்த மென்பொருளை முடக்கிய போலீசார், பல்வேறு ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை டிக்கெட் எடுத்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

எனவே பயணிகளுக்கு இனி எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story