கேஸ் சிலிண்டரின் விலை வரும் மாதங்களில் குறையும்; மத்திய மந்திரி பேட்டி


கேஸ் சிலிண்டரின் விலை வரும் மாதங்களில் குறையும்; மத்திய மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2020 3:37 PM GMT (Updated: 20 Feb 2020 3:37 PM GMT)

கேஸ் சிலிண்டரின் விலை வரும் மாதங்களில் குறையும் என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமற்ற 14 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை கடந்த டிசம்பரில், சென்னையில் 714 ஆகவும், மும்பையில் ரூ.665 ஆகவும், டெல்லியில் ரூ.695 ஆகவும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.725.5 ஆகவும் விற்பனை விலை இருந்தது.

இதன்பின் இந்த விலை கடந்த ஜனவரியில் மீண்டும் அதிகரித்தது.  இதன்படி, சென்னையில் ரூ.734 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும், டெல்லியில் ரூ.714 ஆகவும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.747 ஆகவும் விற்பனை விலை இருந்தது.

இதன்பின்பு கேஸ் சிலிண்டரின் விலை கடந்த 12ந்தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.  இதன்படி, மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்ந்து ரூ.829.50 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால், கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது,  வரும் மாதங்களில் விலை குறையும் என்று கூறினார்.

Next Story