ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு


ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 4:20 PM GMT (Updated: 20 Feb 2020 4:20 PM GMT)

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

புதுடெல்லி, 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது கூட்டம் நேற்று  நடைபெற்றபோது அறக்கட்டளைக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், பொதுச் செயலாளர் சம்பத் ராய், பொருளாளர் சாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Next Story