மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதல்


மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதல்
x
தினத்தந்தி 1 March 2020 12:12 PM IST (Updated: 1 March 2020 4:25 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

சிங்ரவுலி,

மத்திய பிரதேசத்தின் சிங்ரவுலி பகுதியில் நிலக்கரி ஏற்றி சென்ற இரு சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் ரெயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.  ரெயில் விபத்தில் சரக்கு ரெயில் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுனர் சிக்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அவர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளூர்வாசிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story