வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ; டெல்லி காவல்துறை வேண்டுகோள்


வதந்திகளை மக்கள்  நம்ப வேண்டாம் ; டெல்லி காவல்துறை வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 March 2020 7:14 AM IST (Updated: 2 March 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் சில இடங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதாக தகவல் பரவியதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 4 நாட்களாக நீடித்த வன்முறையில், 46 பேர் பலியாகினர்.  கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. நேற்று அமைதி நிலவியது. ஆனாலும் பதற்றமாக காணப்பட்டது. 

போலீஸ் பாதுகாப்புக்கிடையே, பொதுமக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், நம்பிக்கை ஏற்படுத்த உள்ளூர் மக்களுடன் பேசி வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  மேலும், வதந்திகள் பரப்பிய சில நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story