தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் + "||" + Congress MPs Adhir Ranjan Chowdhury & K Suresh have given Adjournment Motion Notice in Lok Sabha over

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

டெல்லி வன்முறை  குறித்து  விவாதிக்க வலியுறுத்தி   எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்
டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளன.
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. மறுநாள் (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கடந்த 11-ந் தேதி பேசினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த அமர்வில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயல் வீசும். அனல் பறக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமிருக்காது.

எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து  விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. அதேபோல்,  டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க ஆம் ஆத்மி, இந்திய கம்யூ.,மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றம் கால வரையின்றி ஒத்திவைப்பு
அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
2. மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அக்.1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது
3. மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரை - அமைச்சர் முரளிதரன் தகவல்
மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.
4. மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.
5. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.