சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு?


சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு?
x
தினத்தந்தி 2 March 2020 10:49 PM IST (Updated: 2 March 2020 10:56 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

மோடி பிரதமராக பதவியேற்றது முதல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் “#NoSir” என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது #NoSir என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளங்களில் டிரண்டாகி வருகிறது. 

Next Story