நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாஜக எம்பிக்கள் நிலைநாட்ட வேண்டும் - பிரதமர் மோடி
நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாஜக எம்பிக்கள் நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாஜக எம்பிக்கள் நிலைநாட்ட வேண்டும் . நாட்டின் வளர்ச்சிக்கு, அமைதி, சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு அவசியம்” என்று பிரதமர் மோடி பேசினார்.
Related Tags :
Next Story