இந்தியா வந்த இத்தாலி சுற்றுலாப்பயணிகள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு?
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப்பயணிகள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் எழுந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப்பயணிகள் 21 பேரில், 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் டெல்லி வந்து ராஜஸ்தான் சென்ற இத்தாலி சுற்றுலாப்பயணிகள் குழுவில், மேற்கூறிய 15 பேரும் இடம்பெற்றிருந்தனர். ஏற்கனவே, இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த இத்தாலி தம்பதிக்கு கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலி சுற்றுலாப்பயணிகள் 15 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானால், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடும். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் சுமார் 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Related Tags :
Next Story