டெல்லியில் 2 நிறுவனங்களில் ரூ.3,500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை கண்டுபிடித்தது
டெல்லியில் 2 நிறுவனங்களில் ரூ.3,500 கோடி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் நிறுவனம் மற்றும் தொலைபேசி நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.3,200 கோடிக்கும், தொலைபேசி நிறுவனத்தில் ரூ.324 கோடிக்கும் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை முடிவில் இந்த தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல டெல்லியில் உள்ள பல ஆஸ்பத்திரிகளில் அதிகளவு வரி பிடித்தம் செய்து, குறைந்த அளவே வருமான வரித்துறைக்கு கட்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. 2 ஆஸ்பத்திரிகளில் நடந்த சோதனையில் ஒன்றில் ரூ.70 கோடிக்கும், மற்றொன்றில் ரூ.20 கோடிக்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story