கொரோனா வைரஸ் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்கனவே மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல் - இருமல் வரும்போது துணிகளை கொண்டு மூடிக்கொள்ளுதல், உடல்நிலை சரியில்லாத சமயங்களில், தனியாக டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துதல், தொடுதல்களை தவிர்த்தல், போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக, கொரோனா மட்டுமின்றி, அனைத்து விதமான தொற்று நோய்களும் பரவாமல் தடுக்க முடியும் என்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை, சிபிஎஸ்இ அமைப்பின் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, 10 மற்றும் 12ம் வகுப்பு எழுதும் மாணவர்கள் முகமூடி (mask) அணிந்து வருவதற்கு சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story