கொரோனா தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ; பிரதமர் மோடி
கொரோனா தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஜம்முவில் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்த சந்தேகங்கள் இருந்தால், மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்” என்றார்.
Related Tags :
Next Story