கொரோனா வைரஸ்; காஷ்மீரில் ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை அறிவிப்பு

காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 4 மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வருகிற மார்ச் 9ந்தேதியில் இருந்து ஸ்ரீநகர், பந்திபோரா, புத்காம் மற்றும் பாராமுல்லா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளும் அடுத்த உத்தரவு வரும்வரை மூடப்படுகின்றன.
இதேபோன்று ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்ச் 31ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
Related Tags :
Next Story