காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை


காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 9 March 2020 3:17 PM IST (Updated: 9 March 2020 3:17 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் காஜ்புரா ரெபான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டு இருந்தது.  இந்நிலையில், இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இதுபற்றி காஷ்மீர் நகர ஐ.ஜி. விஜய் குமார் கூறும்பொழுது, சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளோம்.  அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என கூறினார்.

இதேபோன்று காஷ்மீர் மண்டல போலீசார் கூறும்பொழுது, சோபியானில் நடந்த என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்.  அந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளனர்.
1 More update

Next Story