கொரோனா வைரஸ்; பெங்களூருவில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை


கொரோனா வைரஸ்; பெங்களூருவில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை
x
தினத்தந்தி 9 March 2020 4:12 PM GMT (Updated: 2020-03-09T21:42:53+05:30)

கொரோனா வைரஸ் எதிரொலியாக பெங்களூரு நகரில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து 90க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமுடன் பரவி வருகிறது.  பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் பாதிப்பு கண்டறிந்த பின்பு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நபர் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது பற்றி கர்நாடக மருத்துவ கல்வி மந்திரி டாக்டர் கே. சுதாகர் கூறும்பொழுது, தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் அவர் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக இந்தியா வந்துள்ளார்.  அவருடன் 2,666 பேர் தொடர்பில் இருந்துள்ளனர்.  அவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக பெங்களூரு நகரில் 5ம் வகுப்பு வரையிலான அனைத்து ஆரம்ப பள்ளிகளும் நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் விவரம்

டெல்லி - 4, ஹரியானா - 14, கேரளா - 9, ராஜஸ்தான் - 2, தெலுங்கானா - 1, உத்தரபிரதேசம் - 9, லடாக் யூனியன் பிரதேசம் - 2, தமிழ்நாடு - 1, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் - 1, பஞ்சாப் - 1 மற்றும் கர்நாடகா - 1 என 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story