கொரோனா வைரஸ் அச்சம்; கேரளாவில் கோவில் திருவிழாவில் முககவசம் அணிந்து பொங்கலிட்ட பெண்கள்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பெண் பக்தர்கள் முககவசம் அணிந்தபடி பொங்கலிட்டனர்.
திருவனந்தபுரம்,
கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதியில் திருவனந்தபுரம் செல்லும் வழியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு பெண் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து பொங்கலிட்டு வருகின்றனர்.
கடந்த 1997ம் ஆண்டில் கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சம் ஆகும். இதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இதன்பின்னர் கடந்த 2009ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 லட்சம் அளவுக்கு உயர்ந்தது.
கேரளாவில் இந்த ஆண்டு 3 வயது சிறுமி உள்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்களில் சிலர் தற்காப்புக்காக முககவசம் அணிந்தபடி பொங்கலிட்டனர்.
Related Tags :
Next Story