பிரதமர் மோடியுடன் ஜோதிர்ஆதித்யா சிந்தியா திடீர் சந்திப்பு
ஜோதிர்ஆதித்யா சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி,
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக கமல்நாத் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர்ஆதித்யா சிந்தியா, கமல்நாத் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேருடன் ஜோதிர்ஆதித்யா சிந்தியா கர்நாடகாவுக்கு சென்றதாக கூறப்பட்டது. ஜோதிர்ஆதித்யாசிந்தியாவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை.
இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். ஜோதிர் ஆதித்யா சிந்தியா பாஜவில் இணையலாம் எனத்தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story