தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை; மக்களவையில் இன்று பதிலளிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா + "||" + Union Home Minister Amit Shah to reply on discussion over #DelhiViolence in Lok Sabha around 5.30 pm today,

டெல்லி வன்முறை; மக்களவையில் இன்று பதிலளிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி வன்முறை; மக்களவையில் இன்று பதிலளிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மக்களவையில் டெல்லி வன்முறை குறித்த விவாதத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 

 இந்த நிலையில், பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இதில், மக்களவையில் டெல்லி வன்முறை குறித்த விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாலை 5.30 மணிக்கு பதிலளித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டெல்லி வன்முறை சம்பவம்

டெல்லி ஷாகீன்பாக்கில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.  இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த பிப்ரவரி 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.  இந்த வன்முறையில்  53 பேர் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்களால் வேலைவாய்ப்பு பெருகும் என தகவல்
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.3,200 கோடி மதிப்பில் மத்திய மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டம் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டும் பணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்
நஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டுவதற்கான பணியை காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
3. தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
4. அமித்ஷா வருகிறார்; பா.ஜ.க.வில் மலர்ச்சி ஏற்படுமா?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.380 கோடி மதிப்பிலான தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்ட திறப்பு விழா, சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்பட ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டுகிறார்.
5. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை சென்னை வருகை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார். அப்போது, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதுடன் மெட்ரோ ரெயில் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.