இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் அரசைக் கலைப்பதை விட்டுவிட்டு, பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;-''இந்தியப் பிரதமரே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கலைப்பதில் நீங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றும்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததைக் கவனிக்காமல் போயிருப்பீர்கள். கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை இந்தியர்களுக்கு நீங்கள் அளிப்பீர்களா?
1 லிட்டர் பெட்ரோலின் விலையை 60 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிப்பீர்களா? இது நிச்சயம் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story