காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற முன்னாள் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவர் மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், நேற்று அந்த கட்சியில் இருந்து நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான ஜோதிர் ஆதித்ய சிந்தியா திடீரென விலகினார்.
அவருக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் மத்திய பிரதேச அரசு கவிழும் சூழல் எழுந்தது. இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், சிந்தியா அக்கட்சியில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.
4 முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்த அனுபவமிக்க அவர், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக்கப்பட்டு, மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story