இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமையில் கண்காணிப்பு


இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமையில் கண்காணிப்பு
x
தினத்தந்தி 12 March 2020 2:30 AM IST (Updated: 12 March 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொச்சி,

கேரளாவை சேர்ந்த 45 பேர், நேற்று முன்தினம் இத்தாலியில் இருந்து விமானத்தில் கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 10 பேருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் காணப்பட்டது. அதனால் அவர்கள் கலமசேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

2 குழந்தைகள், 2 கர்ப்பிணிகள் உள்பட 35 பேர், அலுவாவில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அறிகுறி இல்லாததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும், அவரவர் வீட்டில் 28 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உரிய வழிமுறைகளை பின்பற்றுவதாக அவர்களிடம் எழுத்துமூலம் உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது.

Next Story