கொரோனா நோயாளிகள் வந்து சென்ற வங்கிக்கிளை 2 நாள் மூடல்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிலர் வந்து சென்றதையடுத்து வங்கிக்கிளை 2 நாள் மூடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா, கோட்டயம், கொச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர்.
இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி நகரில் தொட்டமன் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிலர் சமீபத்தில் வந்து சென்றதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அந்த கிளை நேற்று மூடப்பட்டது. இன்றும் அது மூடப்பட்டு இருக்கும். வங்கி பணியாளர்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story






